ஞாயிறு, 20 டிசம்பர், 2009

கணித மேதை சீனிவாச ராமானுஜத்தின் பிறந்த நாள்

டிசம்பர் 22ந்தேதி கணித மேதை சீனிவாச இராமானுஜத்தின் பிறந்த நாள். என்னுள் இருக்கும் ஆதங்கமே  நூறு ஆண்டுகளாகியும் நாம் செய்ய தவறியவை என்ன என்பதை கீழே பட்டியலிட்டு உள்ளேன்.
1) கணித மேதை ராமானுஜத்திற்கு ஹார்டி கிடைத்தார். வருங்கால கணித மேதைகளை கண்டுபிடிக்க, அடையாளம் கண்டு ஊக்குவிக்க நாம் என்ன செய்திருக்கிறோம்? (பிறந்த நாள் அன்று மட்டும் விழா எடுத்து பேருக்கு புதிர் போட்டிகள் நடத்தி கிழித்ததை தவிர)
2) ஆராய்ச்சியில் ஈடுபடுவோர் மிகச் சிலரே. அவர்களை மட்டும் ஊக்குவிக்க இராமானுஜம் நினைவு ஆய்வு பரிசு தருவது சரியா?
3) கணித ஆர்வம் குறைந்தவர்களை, கணித திறன் குன்றியவர்களை கணிதத்தில் திறன் வளர்க்கும் பயிலரங்கங்கள் அதிகம் வேண்டும். அதை செய்தோமா?
4) கணிதத்திற்கு என்று இந்தியாவில், அல்லது தமிழ் நாட்டிலாவது நோபல் பரிசு போன்ற ஒரு பெரும் தொகையை ஒதுக்கி, அனைத்து அரசு பள்ளிகளிலும் கணித ஆய்வகங்கள் ஏற்படுத்த படவேண்டும். கல்லூரிகளில் அனைத்து பாடப் பிரிவுகளிலும் கணித ஆய்வு கருத்தரங்கள், பயிலரங்கங்கள், திறனாய்வுகள் நடத்தப் பட வேண்டும்.
5) ஏழை கணித ஆர்வமுள்ள குழந்தைகளுக்கு கல்வி மட்டுமல்ல, நல்ல கணித கண்டுபிடிப்புகளை உருவாக்க அனைத்து கணித ஆசிரியர்களும், பேராசிரியர்களும் முன்வர வேண்டும். (தற்போது ஒவ்வொரு கணித ஆசிரியரும் டியூஷன் எடுத்து சம்பாதிப்பதே குறிக்கோளாய் இருப்பது தடுக்கப்பட்டு, அறிவியல், கணிதம், ஆங்கில மொழி பயிற்சி இலவசமாக ஆக்கப்பட்டு அதற்கென யாரும் பணம் பெற்றால் தண்டிக்கப் பட வேண்டும்.
மேலும் அடுத்த இடுகையில்...