வெள்ளி, 27 மே, 2011

ஞாயிறு, 13 பிப்ரவரி, 2011

கணிதத்தைக் கற்பிப்பது எப்படி?


வெகு காலமாக என் மனதில் உறுத்திக் கொண்டிருக்கும் விசயம் ஒன்றைப் பற்றி எழுதப் போகிறேன். அதைச் சொல்லுமுன் சில கேள்விகள்.
1. பத்தாம் வகுப்பிலும், பனிரெண்டாம் வகுப்பிலும் கணக்கில் நூற்றுக்கு நூறு வாங்கும் மாணவர்கள் ஏன் தொடர்ந்து கல்லூரிகளிலும் நூற்றுக்கு நூறு வாங்க முடிவதில்லை?
2. பத்தாம் வகுப்பில் ஆயிரம் பேருக்கு மேல் கணிதத்தில் நூற்றுக்கு நூறு வாங்குகிறார்கள். அதில் எத்தனை பேர் கணிதத்தில் ஆராய்ச்சி செய்ய வேண்டும் என்கிற ஆர்வத்தோடு ஈடுபடுகிறார்கள்?
3. பள்ளிகள் அளவிலான கணித ஒலிம்பியாட் வெளிநாடுகளில் பிரபலமாக இருப்பது போல் ஏன் தமிழ் நாட்டில் இல்லை? (கேரளாவில் ஒரு நிறுவனம் முனைப்பாக எடுத்து செய்கிறது)
4. கணிதம் செய்து பார்க்க மாணவர்களைத் தூண்டுவது எப்படி? கணிதப் புதிர்களின் குணத்தைக் கண்டு மலைக்காமல் அதன் அழகைக் கண்டு வியக்க வைக்க என்ன செய்ய வேண்டும்?

நான் அறிந்தவரை, கணித ஆர்வலர்கள் சில கணக்கு புதிர் புத்தகங்களை வெளியிடுவதுடன் நின்று கொள்கின்றனர். அல்லது சில சுருக்கு வழிகளை மட்டும் போதிக்கின்றனர். அதில் முறையான திட்டம் இருப்பதாக தெரியவில்லை. எனக்கு அபாகஸ், வேத கணிதம் எனும் முறைகளைப் பற்றி ஐயம் உள்ளது. இவை கணிதம் என்றால் எண்கள் சம்பந்தபட்டது என்கிற அளவில் வாய்பாட்டு அளவில் பயிற்சி தருகின்றன. சிலர் கஷ்டபட்டு வேத கணிதத்தை அல்ஜீப்ராவில் பயன்படுத்தலாம் என்று சொல்லி குழம்பி கொண்டிருக்கின்றனர்.

இனி என் மனதில் உள்ள விசயம் இதுதான்.
வரும் வருடம் சமச்சீர் கல்வி அமலாகும் நிலையில் கணிதத்தை முறையாக வகுப்பு வாரியாக முழுமையாக மாணவர்கள் கணிதத்தை விரும்பும் நிலையில் மேலும் புதிய கண்டுபிடிப்புகளை செய்யும் அளவு அறிவு தரும் வகையில் ஒரு முறையை உருவாக்கி கற்பித்தல் வேண்டும்.
இந்த கணித கற்பித்தல் முறைக்கு உங்களின் மேலான ஆலோசனைகள், உதவிகள் வரவேற்கப்படுகின்றன.
கணித கற்பித்தல் முறையில் விளையாட்டுகள், புதிர்கள் என்கிற வழக்கமான வழியில் இல்லாமல், மாணவனே முயன்று தீர்வு காணும் உணர்வைத் தூண்டும் வகையில் இருக்க வேண்டும்.
உதாரணமாக என் கல்லூரி ஆசிரியர் திரு.பால சுந்தரம் ஒரு மாணவன் காலையில் சாப்பிட்ட இட்லியிலிருந்து அன்று நடத்த வேண்டிய தேற்றத்தின் நிரூபணத்தை அந்த மாணவனின் வாயிலிருந்தே கேள்விகள் கேட்டு வரவழைப்பார்.