செவ்வாய், 24 பிப்ரவரி, 2009

வாய்ப்பாடு தரும் வலி

பெருக்கல் வாய்ப்பாடுகளின் நோக்கமே இரு எண்களின் பெருக்கல் விடையை விரைவில் தெரிந்து கொள்வதுதான் என இந்த கணினி உலகத்தில் புரியும்போது மாணவனின் மனம் சோர்வடைகிறது. தேடுதலில் உள்ள வேட்கை குறைகிறது.
கணிதம் எண்களோடு முடிந்து விடுவதில்லை என புரிய வைக்க முயலாத ஆசிரியர்கள் வாய்ப்பாடு தெரியாவிடில் வாழ்க்கையே வீண் என்பது போல் திணிக்க முயலும்போது வாய்ப்பாட்டில் மட்டுமல்ல, கணிதத்தின் மீதே வெறுப்பு ஏற்படுகின்றது.
ஆரம்ப கல்வி கற்றுத் தரும் வகுப்புகளில் அனைத்து புத்தகங்களிலும் படங்கள் நிறைய இருக்கும். ஆனால் கணித புத்தகத்தில் உள்ள படங்களில் கேள்வி குறியும் இருக்கும். கணிதம் கேள்விக்குரியதாக ஆனது இப்படித்தான்.
மொழிப் பாடங்களில் படத்தை பார்த்து கதை சொல்வோம். (சில சமயங்களில் புதிய கதைகளும் உருவாவது உண்டு). கணிதத்தை மொழியாக கற்றுக் கொடுக்காத காரணத்தினால் இத்தகைய கதைகள் இடம் பெறுவதில்லை.
கதைகள் கற்று கொடுக்காத எந்த கருத்தையும் ஒரு சிறுவன் வேறு எங்கும் கற்று கொள்வதில்லை (அனுபவங்கள் நீங்கலாக).
வாய்ப்பாடு மனனம் தேவையில்லை. வேண்டுமென்றால் விளையாட்டாக மாற்றி கற்பிக்கலாம். அல்லது வித்தியாசமான முறையில் கற்பிக்கலாம்.
எடுத்துக்காட்டாக இந்த இடுகையை பார்க்கவும்.

கணிதம் ஏன் கடினம் ஆனது?

சிறுவர் முதல் பெரியோர் வரை கணிதம் ஏன் கடினம் ஆனது?
ஏன் மற்றப் பாடங்களைப் போல கணிதம் சிலருக்கு எளிதாய் புரிவது இல்லை?
முதலாவது கணிதத்தில் வரும் சூத்திரங்கள், வாய்ப்பாடுகள்.
இரண்டாவது வழிமுறைகள்.
மூன்றாவது விடையினை சோதித்தல்.
நான்காவது பயன்பாடு
ஐந்தாவது நினைவில் நிறுத்த ஏற்படும் சிரமங்கள்.
ஆறாவது கணித விதிகளில் உள்ள குறைபாடுகள்.
இவ்வாறு அடுக்கிக் கொண்டே போகலாம்.
ஒவ்வொன்றாக பார்ப்போம்.
முதலாவது கணிதத்தில் வரும் சூத்திரங்கள், வாய்ப்பாடுகள்.
வாய்ப்பாடுகள்தான் ஒரு மாணவனுக்கு பெரும் பாடாய் அமைகிறது.
முக்கியமாக பெருக்கல் வாய்ப்பாடுகளை
௧)மனப்பாடம் செய்ய வேண்டியதின் அவசியம் என்ன?
௨) எளிதாக கற்று கொள்ள வழி என்ன? (அபாகஸ், வேத கணிதங்களில் எனக்கு நம்பிக்கை இல்லை)

--தொடரும்

வியாழன், 12 பிப்ரவரி, 2009

பலாச் சுளை அறிதல்


பலாப் பழத்தின் சுளை எண்ணிக்கையை அறிய பலாப்பழத்தின் காம்பைச் சுற்றியுள்ள முள்களை எண்ணி ஆறால் பெருக்கி ஐந்தால் வகுக்கவும்.
எடுத்துக்காட்டு
காம்பைச் சுற்றியுள்ள முள்கள் = 100
ஆறால் பெருக்கவும் = 600
ஐந்தால் வகுக்கவும் = 120
சுளைகளின் எண்ணிக்கை = 120
ஆதாரம் - காரி நாயனார் இயற்றிய கணக்கதிகாரம்

செவ்வாய், 10 பிப்ரவரி, 2009

உனக்கு கணக்கு பிணக்கா?



கணித ஆர்வத்தை தூண்டும் முயற்சியே இந்த வலைப் பூவின் நோக்கம்.
பாஸ்கலின் முக்கோணத்தை பற்றி நாம் அறிவோம். தெரியாதவர்கள் http://en.wikipedia.org/wiki/Pascal%27s_triangle படிக்கவும்.
நமது இலக்கியத்தில் இதற்கான ஆதாரம். திருமங்கை ஆழ்வார் அருளிய திருவெழுகூற்றிருக்கையில் காணப் படுகிறது.
இதனை இவ்வாறு படிக்கவும்.

1
1 2 1 ஒரு பேருந்தி யிருமலர் தவிசில் ஒருமுறை அயனை யீன்றனை
1 2 3 2 1 ஒரு முறை இரு சுடர் மீதினிலியங்கா மும்மதில் இலங்கை யிரு கால் வளைய ஒருசிலை
1 2 3 4 3 2 1 ஒன்றிய ஈரெயிற்றழல்வாய் வாளியில் அட்டனை மூவடி நானிலம் வேண்டி முப்புரிலொடு மானுரி யிலங்கும் மார்வினில்