செவ்வாய், 24 பிப்ரவரி, 2009

வாய்ப்பாடு தரும் வலி

பெருக்கல் வாய்ப்பாடுகளின் நோக்கமே இரு எண்களின் பெருக்கல் விடையை விரைவில் தெரிந்து கொள்வதுதான் என இந்த கணினி உலகத்தில் புரியும்போது மாணவனின் மனம் சோர்வடைகிறது. தேடுதலில் உள்ள வேட்கை குறைகிறது.
கணிதம் எண்களோடு முடிந்து விடுவதில்லை என புரிய வைக்க முயலாத ஆசிரியர்கள் வாய்ப்பாடு தெரியாவிடில் வாழ்க்கையே வீண் என்பது போல் திணிக்க முயலும்போது வாய்ப்பாட்டில் மட்டுமல்ல, கணிதத்தின் மீதே வெறுப்பு ஏற்படுகின்றது.
ஆரம்ப கல்வி கற்றுத் தரும் வகுப்புகளில் அனைத்து புத்தகங்களிலும் படங்கள் நிறைய இருக்கும். ஆனால் கணித புத்தகத்தில் உள்ள படங்களில் கேள்வி குறியும் இருக்கும். கணிதம் கேள்விக்குரியதாக ஆனது இப்படித்தான்.
மொழிப் பாடங்களில் படத்தை பார்த்து கதை சொல்வோம். (சில சமயங்களில் புதிய கதைகளும் உருவாவது உண்டு). கணிதத்தை மொழியாக கற்றுக் கொடுக்காத காரணத்தினால் இத்தகைய கதைகள் இடம் பெறுவதில்லை.
கதைகள் கற்று கொடுக்காத எந்த கருத்தையும் ஒரு சிறுவன் வேறு எங்கும் கற்று கொள்வதில்லை (அனுபவங்கள் நீங்கலாக).
வாய்ப்பாடு மனனம் தேவையில்லை. வேண்டுமென்றால் விளையாட்டாக மாற்றி கற்பிக்கலாம். அல்லது வித்தியாசமான முறையில் கற்பிக்கலாம்.
எடுத்துக்காட்டாக இந்த இடுகையை பார்க்கவும்.

1 கருத்து: