வியாழன், 12 பிப்ரவரி, 2009
பலாச் சுளை அறிதல்
பலாப் பழத்தின் சுளை எண்ணிக்கையை அறிய பலாப்பழத்தின் காம்பைச் சுற்றியுள்ள முள்களை எண்ணி ஆறால் பெருக்கி ஐந்தால் வகுக்கவும்.
எடுத்துக்காட்டு
காம்பைச் சுற்றியுள்ள முள்கள் = 100
ஆறால் பெருக்கவும் = 600
ஐந்தால் வகுக்கவும் = 120
சுளைகளின் எண்ணிக்கை = 120
ஆதாரம் - காரி நாயனார் இயற்றிய கணக்கதிகாரம்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
Hi
பதிலளிநீக்குஉங்கள் வலைப்ப்திவை வலைப்பூக்களில் பதித்ததற்கு
நன்றி.
உங்கள் இணைப்பை
இங்கு பார்க்கவும்.
நட்புடன்
வலைபூக்கள் குழுவிநர்
அருமை திரு.வீரராகவன். பலாச்சுளை கணக்கு வியப்பையும் மகிழ்ச்சியையும் தருகிறது. உங்களது வலைப்பூ புகழ் பெற வாழ்த்துக்கள்.
பதிலளிநீக்குஇதன் மூலம் விளங்கக் கூடிய செய்திகள்:
பதிலளிநீக்கு1. முட்கள் 5ன் மடங்காக அமைந்தால்தான் சுளைகளின் எண்ணிக்கை முழு எண்ணாக வரும்.
2. சுளைகள் முழு எண்ணிக்கையாக வரும் பட்சத்தில், 6ன் மடங்காகவே அமையும்.
அதாவது 6,12,18 ...என 6ன் மடங்காகவே சுளைகள் அமையும். இதைச் சுலபமாகச் சரி பார்க்கலாமே!
3 x 19 = 57 - 9 = 48
பதிலளிநீக்குதிரு.இப்ராஹீம் புகாரி அவர்களுக்கு நன்றி. 5,6 எண்களின் பொதுக் காரணி 1 என்பதால் நீங்கள் கூறியதுதான் சாத்தியம். பலா காம்பின் அருகே அமையும் முட்கள் 5ன் மடங்காகத்தான் அமைகின்றன. ஒருவித ஐந்து கோண (பெண்டகன்) வடிவில் அமைகின்றன. சுளைகள் 6ன் மடங்காகத்தான் உள்ளது. இந்த இயல்பை ரிசோனன்ஸ் என்கிற உயிரியல் மாத இதழ் ஒன்றில் கட்டுரையாக வந்தது. அதன் இணைப்பை விரைவில் தருகிறேன். எனது மற்ற கட்டுரைகளையும் வாசித்து கருத்து கூறுங்கள். மீண்டும் வாரம் ஒருமுறையாவது எழுதலாம் என முயற்சிக்கின்றேன்.
பதிலளிநீக்கு